ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2012

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்: சென்னையில் கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளுக்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு, இம்மாதம், 15ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது.கடந்த, 2010-11ம் ஆண்டில், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பட்டதாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு நடத்தப்பட்டது. இதில், தேர்வானவர்களுக்கு, இம்மாதம்,15ம் தேதி, சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகத்தில், கலந்தாய்வு கூட்டம் நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. மேலும், தேர்வானவர்கள், உரிய சான்றுகளுடன் வர வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி