5ம் வகுப்பு கணித புத்தகத்தில் தவறான கேள்வி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2013

5ம் வகுப்பு கணித புத்தகத்தில் தவறான கேள்வி.

ஐந்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் மாணவர்களை குழப்பும் வகையில் வினா தரப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளுக்குபுத்தகங்கள் இலவசமாக மூன்று பருவமாக வழங்கப்படுகிறது. கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒரு புத்தகமாகவும், ஆங்கிலம், தமிழ் ஒரே புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது.சமீபத்தில் வழங்கிய, ஐந்தாம் வகுப்பு கணக்கு பாடத்திற்கு தரப்பட்டுள்ள தமிழ்வழி புத்தகத்தில் (பக்கம் 26), "அம்மா வாங்கிய ரிப்பனின் அளவு 10 மீட்டர். அதில் 2 மீட்டர் 500 செ.மீ., ரிப்பனைவெட்டி எடுத்து விட்டால் மீதியுள்ள ரிப்பன் அளவுஎன்ன என கணக்கு கேட்கப்பட்டுள்ளது.மீதியுள்ள ரிப்பன் 7 மீட்டர் 50 செ.மீ., என விடை தரப்பட்டுள்ளது. ஆனால் தரப்பட்டுள்ள கணக்கின்படி ஏழு மீட்டர் போக, மீதி மூன்று மீட்டர் தான் வர வேண்டும். 50 செ.மீ., என்பதற்கு பதிலாக, தவறுதலாக 500 செ.மீ., என அச்சிடப்பட்டுள்ளது. இது மாணவர்களை குழப்பமடைய செய்துள்ளது.ஆங்கில வழிப்புத்தகத்தில் இந்த கணக்கும், விடையும் சரியாக தரப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை களைய வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி