சர்வதேச அளவில் புகழ் பெற்ற சிங்கப்பூரில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சிபிஎஸ்இ, ஐஎஸ்சிஇ மாணவர்கள் நேரடியாகச் சேரலாம். பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களைப் பொருத்து அட்மிஷன் கிடைக்கும். மாநில போர்டு மாணவர்கள்SATதேர்வை எழுத வேண்டும். இங்கு படிக்கச் சேரும் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றதிறமையான மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும்இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் மாறி வருகிறது. இங்கு சீனம், மலாய் மொழி பேசுபவர்களுடன் தமிழ் மொழி பேசுபவர்களும் இருக்கிறார்கள். இங்குள்ள கலாசார பண்பாடுகள் நமக்கு நெருக்கமானவை. அமெரிக்காவிலோஐரோப்பாவிலோ படிப்பதை விட சிங்கப்பூரில் படிப்பதற்கு ஆகும் செலவு குறைவு. திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் கிடைக்கும். கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் படிப்புக் காலம் முடிந்ததும் சிங்கப்பூரில் பதிவு பெற்ற தொழில் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். ஆனால், சிங்கப்பூரில் பதிவு பெற்ற தொழில் நிறுவனத்திற்கு வேறு நாடுகளில் கிளைகள் இருந்தால் அதிலும் பணிபுரியலாம். சிங்கப்பூர்பல்கலைக்கழகத்திலேயே முதுநிலைப் படிப்பையும் படித்து விட்டுக் கூட, சிங்கப்பூரில் பதிவு பெற்ற தொழில் நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை பூர்த்தி செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், அண்மையில் சிங்கப்பூருக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆசியாவில் உயர்கல்வி படிப்பதற்கு சர்வதேச அளவில் முக்கியத்துவம்வாய்ந்த பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் உள்ள நேஷனல் யூனிவர்சிட்டிஆஃப் சிங்கப்பூர். கியூ.எஸ். உலகப் பல்கலைக்கழக தகுதிப்பட்டியலில் 25-வது இடத்தில் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளது. இதிலிருந்தே இந்தப் பல்கலைக்கழகத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ளலாம். இந்தப் பல்கலைக்கழகத்தில் 100 நாடுகளைச் சேர்ந்த 37 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இங்கு இளநிலைப் பட்ட நிலையில் 56 வகையான படிப்புகளைப் படிக்கவாய்ப்புகள் உள்ளன. 100-க்கு மேற்பட்ட டபுள் மற்றும் ஜாயின்ட் டிகிரி படிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களை ஈர்க்க இந்தப் பல்கலைக்கழகம் ஆர்வமாக உள்ளது.இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் பிளஸ் டூ அல்லது அதற்கு நிகரான படிப்புக்கு இந்த ஆண்டில் தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் நேஷனல் யுனிவர் சிட்டி ஆஃப் சிங்கப்பூர் கல்வி நிலையத்தில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். பள்ளியில் கடைசியாக எழுதிய தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளிவந்ததும், அந்த மதிப்பெண்களையும் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.சிபிஎஸ்இ, ஐஎஸ்சிஇ மாணவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து பாடங்களில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.சிபிஎஸ்இ, ஐஎஸ்சிஇ மாணவர்கள்SATமற்றும் சப்ஜெக்ட் தேர்வுகளை எழுத வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களிலும் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். மாநில போர்டுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள்SATமற்றும் சப்ஜெக்ட் தேர்வுகளை எழுத வேண்டியது அவசியம். அதேசமயம், ஆங்கில மொழிக்கான தேர்வுகளை எழுத வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு இந்தப் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைக்கும்.மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் ஐந்து படிப்புகளை விருப்ப வரிசைப்படி குறிப்பிட வேண்டும். பிளஸ் டூ தேர்வில் மிக அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு இங்கு அட்மிஷன் கிடைக்கும்.சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டி, தேசிய விருதுகள், தேசிய விளையாட்டுக் குழுவில் இடம் பெறுதல், ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வு ரேங்க் வரிசையில் சிறப்பிடம்பெறுதல் போன்ற சாதனைகளும் அட்மிஷனின்போது கருத்தில் கொள்ளப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் டூ படிக்கும் இந்திய மாணவர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மே, ஜூன் மாத வாக்கில் அட்மிஷன் பட்டியல் விவரங்கள் வெளியிடப்படும்.பல்கலைக்கழகத்தில் உள்ள படிப்புகள் மற்றும் அட்மிஷன் குறித்த விவரங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் விரிவாக உள்ளன. உங்களுக்குஏற்படும் சந்தேகங்கள் குறித்து பல்கலைக்கழக அட்மிஷன் பிரிவுக்குஎழுதி, தேவையான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஸ்காலர்ஷிப் கோரி விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அதற்கு தனியே விண்ணப்பிக்க வேண்டும். சிங்கப்பூரில் சர்வதேச புகழ் பெற்ற நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் திறமையான மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
விவரங்களுக்கு:
http://www.asladmissions.nus.edu.sg
Feb 11, 2013
CBSE மாணவர்கள் நேரடியாக சிங்கப்பூரில் படிக்கலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி