தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.50கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள்,மூன்றுமாதங்களில் முடிவடையும் என,எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகஅரசின் நிர்வாகப்பணிகள் அனைத்தும்,மின்னணு முறையில் மாற்றப்பட்டுவருகிறது.இதனால்,அரசின் தகவல் பரிமாற்றங்களைக்கூட,மின்னணுமுறையில் மேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.இதற்காக,தமிழகஏரியாநெட்வொர்க்,தமிழகடேட்டாமையம்,மின்னணுமாவட்டத்திட்டம்,மாநில சேவைகளை வழங்கும் வழித்தடம் ஆகியதிட்டங்களை,தமிழகஅரசுசெயல்படுத்திவருகிறது.இத்திட்டங்களை,மாநிலஅரசுஅலுவலர்கள்பயன்படுத்த வேண்டும் என்றால்,அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மேலும்,அலுவலகத்தின் அன்றாடப்பணிகளை,மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.பலசேவைகளை,ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால்,இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன.எனவே,தமிழகஅரசின் அனைத்து அலுவலகங்களிலும்,இணையதளவசதியை ஏற்படுத்த அரசுநடவடிக்கை எடுத்துள்ளது.இவற்றோடு,அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும்,இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது.இணையதளவசதியோடு,ஒவ்வொரு துறை அலுவலகங்களும்,வங்கிகளைப்போல,கணினிநெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.இதற்காக,அரசு மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும்,ஒப்பந்தப்புள்ளியை,எல்காட் நிறுவனம்கோரியுள்ளது.ஒவ்வொரு அலுவலகத்துக்கும்,தரைவழிதொலைபேசி இணைப்புடன்,பிராட்பேண்ட் இணைப்புகள்வழங்குதல்,தரைவழி தொலைபேசிக்கு,இலவச உள்அழைப்பு வசதிமட்டும் இருக்கும் வகையில்,இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.இதுகுறித்து,தமிழக அரசுமூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:அனைத்து அலுவலகங்களும்,இணையதளவசதி பெறும்போது,தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு,அரசின் அனைத்துசெயல்மற்றும்தகவல்களை,இணையதளம் மூலம்,உடனுக்குடன் அறியமுடியும்.நாட்டின் கடைகோடியில் இருக்கும் அலுவலகங்கள்கூட,மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஒப்பந்தப்புள்ளிகள்முடிவுசெய்யப்பட்டு,மூன்று மாதங்களில்,அனைத்துஅலுவலகங்களிலும்,இணையதளவசதிஅளிக்கப்படும் என,எல்காட்வட்டாரங்கள் கூறுகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி