தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2013

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட். படிப்பில் 1000 இடங்களுக்கு சேர்க்கை.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் பி.எட். படிப்பில் உள்ள 1000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.விண்ணப்பங்கள் ஜூலை 26-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன.விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயை பி.எட். கல்வி மையங்களில் செலுத்தி, நேரில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது 550 ரூபாய்க்குவரைவோலை எடுத்து, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், 577, அண்ணா சாலை, சென்னை 600 015 என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து அஞ்சல் வழியாக பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 26-ஆம் தேதிக்குள் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தலா 500 இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 8 நகரங்களில் நடைபெறும்.தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணிவரை நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை அக்டோபர் மாதம் தொடங்கும். வகுப்புகள் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்குகிறது. கூடுதல் விவரங்களை அறிய 044 - 2430 6658 அல்லது 044 - 2430 6657 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி