அடிப்படை வசதிகள் இல்லாத 1,000 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய குழு கருத்துகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2013

அடிப்படை வசதிகள் இல்லாத 1,000 தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய குழு கருத்துகள்.

அடிப்படை வசதிகள் இல்லாத 1000 தனியார் பள்ளிகளை ஆய்வுசெய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் 5 பேர் கொண்டகுழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்புக்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் செய்திருக்க வேண்டும்.அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் பள்ளிக்கு குறைந்தபட்சம் 6 கிரவுண்டு நிலமும், நகராட்சி பகுதிகளில் 8 கிரவுண்டு நிலமும், மாவட்ட தலைநகரங்களில் 10 கிரவுண்டு நிலமும், பேரூராட்சி பகுதிகளில் 1 ஏக்கர் நிலமும், கிராம ஊராட்சிகளில் 3 ஏக்கர் நிலமும் இருக்க வேண்டும். இதுதவிர, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய வசதிகளும் இருக்க வேண்டும்.இந்த விதிகளுக்கு உட்படாத பள்ளிகளுக்கு தொடர் அங்கிகாரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகளின் இடப்பரப்பளவு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேவராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, முழுமையாக ஆய்வு நடத்தி 3 மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி