எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்., 15 முதல் 19 ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 12 மணி வரை, நடக்க உள்ளது.இதற்கான அனுமதிச் சீட்டுகள் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் பெயர், பிறந்ததேதி, மையம், பதிவெண்ணை சரிபார்த்துக் கொள்ளவும்.கடந்த 2009-10ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியதனித்தேர்வர்கள் பலர், சுயமுகவரியிட்ட கடிதத்தை ஒப்படைக்காததால், பலருக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கவில்லை. அவைமதுரை அரசு தேர்வுகள் துறை துணைஇயக்குனர் அலுவலகத்தில் உள்ளன.விதிப்படி தேர்வு முடிவுகள் வெளியான, 2 ஆண்டுகளில் அவை அழிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு மாதத்திற்குள் ரூ.30 ஸ்டாம்ப்ஒட்டிய தபால் உறையை வழங்கி, மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என, துணை இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி