மருத்துவம் மற்றும் பொறியியல் தொடர்பான ஒருங்கிணைந்த தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2013

மருத்துவம் மற்றும் பொறியியல் தொடர்பான ஒருங்கிணைந்த தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மருத்துவம் மற்றும் பொறியியல் தொடர்பான ஒருங்கிணைந்த தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிற வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற
உள்ளது. தேர்வுக்கான பாடத் திட்டம், அடிப்படைத் தகுதிகள், தேர்வு மையங்கள் குறித்த கூடுதல்தகவல்களை தெரிந்து கொள்ள www.upsc.gov.inஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி வெளிவந்த Employment News செய்தித் தாளில் தேர்வுகள் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தை பார்க்கவும். பொறியியல் தொடர்பான தேர்வு ஜூன் 28-ஆம் தேதியும், மருத்துவம்தொடர்பான ஒருங்கிணைந்த தேர்வு ஜூன் மாதம் 30-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி