"நமது கல்விதிட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதால், கல்வித்துறையில் முதல்வர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல் நிலை பள்ளியில் நடந்த,அறிவியல் புத்தாக்க ஆய்வு ஊக்க நிதி,மாணவர்களின் தாய், தந்தை விபத்தில் இறந்தாலே,நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, 50 ஆயிரம் நிதியுதவி வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது: கல்வித்துறைக்கு 16,965 கோடி ரூபாய் நிதியினை, முதல்வர்ஒதுக்கீடு செய்துள்ளார். கல்வித்துறையில் முதல்வர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மற்ற மாநிலங்கள், நமது கல்வித்துறை திட்டங்களை அறிந்து செல்கின்றன. இதன் மூலம் தமிழக கல்வித்துறை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது, என்றார்.அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, "" இளைய தலைமுறையினர் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் ஞானியாக, முதல்வர் உள்ளார்,'' என்றார். கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். முதன்மைக்கல்வி அலுவலர் பகவதி வரவேற்றார். மாவட்ட ஊராட்சித்தலைவர் வசந்தா, ஒன்றியத்தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் மூக்கையா, நகராட்சித்தலைவர் சாந்தி, துணைத்தலைவர் மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Apr 7, 2013
Home
kalviseithi
கல்வித்துறையில் மறுமலர்ச்சி: அமைச்சர் வைகைச்செல்வன்
கல்வித்துறையில் மறுமலர்ச்சி: அமைச்சர் வைகைச்செல்வன்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி