தொடக்க கல்வி இணை இயக்குனரிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 7, 2013

தொடக்க கல்வி இணை இயக்குனரிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைப்பு.

தேர்வுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கியசாமி (மேல்நிலை கல்வி), கடந்த மாதம், 31ம் தேதி, ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து,கருப்புசாமியிடம், தேர்வுத்துறை இணை இயக்குனர் பணி, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே, தேர்வுத்துறையில் பணி புரிந்தவர் என்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.காலி பணியிடங்களை நிரப்பாமல், அதிகாரிகளுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கும் போக்கு, கல்வித்துறையில், அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் கண்ணப்பன், நூலகத்துறை இணை இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார்.மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் பயிற்சி இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். இயக்குனர் நிலையில், பாடநூல் கழக செயலர் பணியில் உள்ள பிச்சை,மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பணியை, கூடுதலாக கவனித்து வருகிறார். புதிய கல்வி ஆண்டு துவங்குவதற்குள், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டு, பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி