ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறுவதால், மருத்துவ மாணவர்களுக்கு சிரமம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2013

ஒரே நாளில் இரண்டு தேர்வுகள் நடைபெறுவதால், மருத்துவ மாணவர்களுக்கு சிரமம்.

மாநில அரசு மற்றும் அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவத் தேர்வுகள் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், மருத்துவ மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.வரும் மே மாதம் 12-ஆம் தேதி தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், உதவி மருத்துவர் பணிக்கான தேர்வை நடத்துகிறது. அதேநாளில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் கல்வி நிறுவனம், MD, MS,MDS போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்துகிறது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் MBBS பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதால், மே 12-ஆம் தேதி எந்தத் தேர்வை எழுதுவது என குழப்பம் அடைந்துள்ளனர்.அதேபோல, வரும் ஜூன் 2-ஆம் தேதி பொறியியல் படிப்பில் சேர்வதற்கான JEE - Advance தேர்வு நடைபெறுகிறது. அதே நாளில், MBBS படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை எய்ம்ஸ் நடத்துகிறது. இதனால் +2 முடித்துவிட்டு, இந்தத் தேர்வுகளை எழுதக்கூடிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே ஜிப்மர் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை விரைவில் மாற்று தேதிகளை அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி