IFBI எனப்படும் Institute of Finance, Banking and Insurance நிறுவனத்தில் வங்கித் துறை சார்ந்த முதுநிலை பட்டயப் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்றுவருகிறது.PGDBO எனப்படும் Post Graduate Diploma in Banking Operations என்ற பட்டயம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 மாத கால அளவிலான இந்த பட்டய வகுப்பில் வங்கித் துறை பணிகள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் குறித்த பாடங்களும் இந்த பட்டய வகுப்பின் பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.நேரடியாக வங்கிக்குச் சென்று பயிற்சி பெறவும் இந்த பட்டயப் படிப்பில் வாய்ப்பு உள்ளது. இதற்கென ஐசிஐசிஐ வங்கியுடன் IFBI நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. வங்கித் துறையில் வல்லுநராக திகழ்பவர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும்.இந்த பட்டய வகுப்பில் படித்து முடிப்பவர்கள் முன்னணி வங்கிகளில்பணி வாய்ப்பை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறும் பேட்ச்-கான வகுப்புகள் ஏப்ரல் 30-ஆம் தேதி தொடங்குகிறது. கூடுதல் விவரங்களுக்கு www.ifbi.comஎன்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.இந்த முதுநிலைப் பட்டய வகுப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள்:IFBI கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் 3 மாத கால அளவிலான வங்கித் துறை தொடர்பான முதுநிலைப் பட்டய வகுப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் இளநிலைப் பட்டப் படிப்பு முடித்தவர்கள் இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 1988-ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு பின்னர் பிறந்திருக்க வேண்டியது அவசியம். பட்டய வகுப்பில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.IFBI கல்வி நிறுவனத்தின் சேர்க்கை மையங்கள், சென்னை, கோயமுத்தூர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ளன. சென்னையில் உள்ளவர்கள், Regional Admission Office, 1st Floor, 27 & 28 Dowlani Towers, Dr.R.K.Salai Road, Mylapore, Near Yellow Pages Bus Stop, Chennai என்ற முகவரியை அணுகவும்.கூடுதல் விவரங்களுக்கு www.ifbi.comஎன்ற இணைய தள முகவரியை அணுகலாம். அல்லது 1800 266 8000 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி