ஆசிரியர் தகுதி தேர்வு 5 லட்சத்துக்கும் மேல் குவிந்தது விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு 5 லட்சத்துக்கும் மேல் குவிந்தது விண்ணப்பம்.

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தின்படி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்தது. இந்த சட்டத்தின்படி 23.08.2010க்கு பிறகு இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.இதன்படி, தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு கடந்த ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் தகுதித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு விண்ணப்பங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதால் இந்த ஆண்டு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இவற்றை பெற அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் கூட்டம் அலைமோதியது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்க வேண்டும். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி ஆகிய மூன்று மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள் அதை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைத்து ஒப்புதல் சீட்டு பெற்று வருகின்றனர். விண்ணப்பங்களை வழங்க தமிழகத்தின் 66 மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று வரை தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்பூர்த்தி செய்து வழங¢கப்பட்டுள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்து வழங்கவும் நாளை (ஜூலை 1ம் தேதி) கடைசி நாளாகும். வரும் ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி