எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிகற்றல் முறை தொடர் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 1, 2013

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிகற்றல் முறை தொடர் பயிற்சி

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறை வலுவூட்டல் பயிற்சி நடந்தது.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இக்கம் மூலம் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் முறையிலும் 6-8ம் வகுப்பு குழந்தைகளுக்கு படைப்பாற்றல் கல்விமுறையிலும் கல்வி கற்பிக்கப்படுகிறது.எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழி கற்றல் அட்டைகளில் செய்துள்ள சிறிய மாறுதல்கள் பற்றியும், வளரறி மதிப்பீடு பற்றியும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் பாளை பிளாரன்ஸ் சுவைன்சன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.பயிற்சி முகாமை அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கஸ்தூரி பாய் தலைமை வகித்து துவக்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் சோபியா, செல்வின், ஆசிரிய பயிற்றுனர் விக்டர் ஜான்சன், சுந்தர், ஜெயக்குமார், மோகனன், ஆசிரியர் குமார் பயிற்சி அளித்தனர்.இதில் 245 ஆசிரிய பயிற்றுனர்கள் பயிற்சியாளர்களாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சகாய ஜூடி செய்திருந்தார்.தொடர்ந்து 6ம் தேதி மாவட்டத்தில் 40 சதவீத ஆசிரியர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குறு வள மையங்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி