அதிக மாணவர்களை ஏற்றி சென்றால் ஆட்டோக்கள் பறிமுதல் நிச்சயம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2013

அதிக மாணவர்களை ஏற்றி சென்றால் ஆட்டோக்கள் பறிமுதல் நிச்சயம்.

பள்ளிகளுக்கு அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்வோம்" என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது.கடந்த ஜூன் 10ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி வாகனங்களை தவிர்த்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, "மேக்சி கேப்&' உள்ளிட்ட பிற வாகனங்களிலும், மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு செல்வது வழக்கம். இந்த வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சில விதிமுறைகளை பின்பற்ற போக்குவரத்துத் துறை, அறிவுறுத்தியது.பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும், ஆட்டோக்களில், 12 வயதுக்கும் குறைவான வயது உடைய, மாணவ, மாணவியர் இருப்பின், ஐந்து பேரை மட்டுமே, ஆட்டோவில் ஏற்றிச் செல்ல வேண்டும்; 12 வயதுக்குமேல் இருப்பின், மூன்று பேருக்கு மட்டுமே, அனுமதி அளிக்கப்பட்டது.ஷேர் ஆட்டோக்களில், எட்டு பேர் வரையும், 12 வயதுக்கு மேல் இருப்பின், ஐந்து பேர் வரை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்டது."மேக்சி கேப்" வாகனத்தில் அதிகபட்சமாக, 12 பேர் வரை ஏற்றிச் செல்லலாம். இருப்பினும், பள்ளிக்கு செல்லும் பெரும்பாலான ஆட்டோ,ஷேர் ஆட்டோ, "மேக்சி கேப்" உள்ளிட்ட வாகனங்களில், விதிமுறைகளை மீறி அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, விதிகளை மீறும் வாகனங்களை, பறிமுதல் செய்ய, போக்குவரத்து துறை முடிவு எடுத்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விபத்துகளை தவிர்க்க, "ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது" என அறிவுறுத்தி வருகிறோம். இருந்தும் விதிகளை மீறி வருகின்றனர். இனி, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்வோம். தேவையின் அடிப்படையில், வாகன ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.அதிக எடை; அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் சென்றவை; அதி வேகமாக வாகனங்களை இயக்குதல்; ஓட்டுனர் உரிமங்கள் இல்லாமல் இயக்குதல் உள்ளிட்ட விதிகளை மீறும் வாகனங்களை சோதனை செய்யும் பணிகளை, போக்குவரத்து துறையின் கண்காணிப்பு குழுக்கள் கவனித்து வருகின்றன.கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம், 10,342 ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களை சோதனை செய்ததில், 1,270 வாகனங்கள் விதிகளை மீறியது கண்டறியப்பட்டது. இந்த ஆட்டோ ஓட்டுனர்களிடம் இருந்து, 8.91 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி