பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்திற்கு மவுசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2013

பொறியியல் கலந்தாய்வு: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்திற்கு மவுசு.

பி.இ., கலந்தாய்வு துவங்கியதில் இருந்து, இ.சி.இ., (எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பாடப் பிரிவு தான், முதலிடத்தில் இருந்தது. தர வரிசையில் முதலிடங்களை பெற்ற மாணவர் உட்பட அனைவரும், இந்த பாடப் பிரிவைத் தான் தேர்வு செய்தனர்.ஆனால் தற்போது, இ.சி.இ., பாடப்பிரிவு, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக, எம்.இ., (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) பாடப் பிரிவை, 27,378 பேர், தேர்வு செய்துள்ளனர். இ.சி.இ., பிரிவில், 22,259 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மூன்றாவது இடத்தில், சிவில் இன்ஜினியரிங் பிரிவு உள்ளது. இதில்,15,431 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.ஆட்டோ மொபைல், ஏரோநாட்டிகல், பயோ டெக்னாலஜி, ஐ.டி., போன்ற துறைகளை, மாணவர்கள் அதிகளவில் சேரவில்லை.சிவில் இன்ஜினியரிங், தமிழ் வழியில், 307 மாணவர்களும், எம்.இ., தமிழ் வழி பிரிவில், 245 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி