ஆசிரியர் தகுதி தேர்வு 5.50 லட்சம் பேருக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு 5.50 லட்சம் பேருக்கு இன்று ஹால் டிக்கெட் வெளியீடு.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகபணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் எழுதினர்.ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன. இந்த ஆண்டுக்கான காலி இடங்களையும் சேர்த்து 17000 பணியிடங்கள் இப்போது நிரப்ப வேண்டி நிலை உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு வரும் 17, 18ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக 12 லட்சம் விண்ணப்பங்களை டிஆர்பி அச்சிட்டு கடந்த மே மாதம் 31ம் தேதி முதல் வினியோகம் செய்தது.   சுமார் 6 லட்சம் இடைநிலை மற்றும் பட்டதாரிகள் டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். சென்னையில் நேற்று வரை தாள் ஒன்றுக்கு 6538, தாள் இரண்டுக்கு 17,038 விண்ணப்பங்கள் வந்துள்ளன.விண்ணப்பம் போட்டவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்துள்ளதாக டிஆர்பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தகுதியுள்ளவர்களுக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணிகள் தற்போது நடக்கிறது. இன்று மாலை இணைய தளத்தில் அவை வெளியிடப்பட உள்ளன. மேலும், டிஇடி தேர்வுக்கான தேர்வு மையங்கள், மாவட்ட வாரியாக தேர்வு எழுத உள்ளவர்கள் பட்டியல்கள் தயாரிக்கும் பணியும் நடக்கிறது. இதையடுத்து இன்று மாலை டிஇடி தேர்வுக்கான முதற்கட்ட பணிகள் முடியும்.

2 comments:

  1. what about the tntet hall ticket downloading
    pls let me know.

    ReplyDelete
  2. RRB ASM EXAM SAME DATE ON 18.08.2013

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி