அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2013

அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு.

2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது . மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கான பெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினி அறிவியல் B.Ed., சங்கத் தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி