குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 4 தேர்வு வரும் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)) வெளியிடப்படப்பட்டது.ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், தாங்கள் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியதற்கான படிவத்தை டி.என்.பி.எஸ்.சி., மின்னஞ்சல் மூலமாக அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.மின்னஞ்சல் அனுப்பிய அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மின்னஞ்சல் அனுப்பியும் ஹால் டிக்கெட் கிடைக்கப் பெறாதவர்கள்தங்களின்விண்ணப்பம் மற்றும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டு ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அணுக வேண்டும். தேர்வு எழுத தேர்வு செய்துள்ள மையம் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் தேர்வாணைய அலுவலரை இரண்டு தினங்களிலும் தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட் குறித்த தகவல்களை கேட்டுப் பெறலாம் என்று தேர்வுக் கட்டுப்பாட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி