பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மான்ட்ஃபோர்ட் பள்ளி சார்பில் நாளை பேச்சுப் போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெறுவோர் சிங்கப்பூர், கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவர்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்சி காட்டூர் மான்ட்ஃபோர்ட் பள்ளி சார்பில், வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:மாணவர்களிடம் கல்விக்கு அப்பாற்பட்டு திறமைகளை ஊக்குவிக்கவும், மாணவ சமுதாயத்தின் நல்லிணக்க மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு, சென்றாண்டு பள்ளிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி, "பேச்சுத் திறனால் வெல்லுங்கள் சிங்கப்பூர் செல்லுங்கள் 2012" எனும் தலைப்பில் நடத்தப்பட்டது.இந்தாண்டுக்கான போட்டி மற்றும் கால், அரை இறுதி போட்டி நாளை (23ம் தேதி), நடக்கிறது. 24ம் தேதி இறுதி போட்டி திருச்சி சங்கம் ஹோட்டல் வளாகத்தில் நடக்கிறது.தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தனியே நிகழும் இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் அல்லது மாணவிக்கு தத்தம் ஒரு பெற்றோருடன் சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பையும், இரண்டாம் பரிசு பெறும் மாணவர் அல்லது மாணவி, பெற்றோர் ஒருவருடன்கொழும்பு செல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பயணம் மற்றும் தங்கும் செலவு முழுவதும் மான்ட்ஃபோர்ட் பள்ளியால் ஏற்கப்படுகிறது.இப்போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 50 பள்ளிகளில் இருந்து, 100 மாணவ, மாணவியர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி