இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து அனைத்து சங்கங்களும் இணைந்து போராடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2013

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு குறித்து அனைத்து சங்கங்களும் இணைந்து போராடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணையில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகததால் ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு சங்கங்கள்  தனித்தனியாக பல்வேறு கட்ட போராட்டங்கள் அறிவித்தன. ஆனால் தனிப்பட்ட சங்க போராட்டம் பெரியளவில் வெற்றியடைய வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் கூட்டு போராட்டத்திற்க்காக அழைப்பு விடுக்க 5 நபர் குழு அமைத்து அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்தது.இதையடுத்து இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் அனைத்து சங்கங்கள் இணைந்து போராட அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற சங்கங்களும் இணைந்து போராட விரைவில் அழைப்பு விடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விரைவில் அனைத்து சங்கங்களும் இணைந்து, அடுத்தகட்ட கூட்டுப் போராட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இடைநிலை ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி