அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க தடை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2013

அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க தடை.

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.இதில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற பகுதி நேர ஆய்வு கல்விக்கு, இயக்குனர் அனுமதியும், பி.எட்., - எம்.எட்., போன்றவைபடிக்க, மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதியும் பெற வேண்டும். இதை பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலர், முழு நேர வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். அதற்கு அனுமதி வேண்டி, ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.இதையடுத்து, "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடி படிப்பில் சேர அனுமதி வழங்குவதை, தவிர்க்க வேண்டும்" என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு, ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களில், தொலைதூரக் கல்வி மூலம், பி.எட்., பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில்சேர்ந்து படிக்க, ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தடை இல்லை.நேரடி சேர்க்கை மூலம், உயர்கல்வி படிப்பை அனுமதிக்க, அரசு ஆணை எதுவும் இல்லை. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், படிப்புக்காக, விடுப்பில் சென்றால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும்.எனவே, நேரடி சேர்க்கையில், பி.எட்., பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பில் சேர, அரசாணை ஏதும் இல்லாத நிலையில், அதற்கான அனுமதி வழங்குவதை, அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி