மத்திய அரசு ஊழியர்களுக்கு10% அகவிலைப்படி உயர்வு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு10% அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்து சதவித அகவிலைப்படி உயர்வு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையிடமிருந்து பெறுவதற்கான நடைமுறைகளில் நிதியமைச்சகம் ஈடுபட்டுள்ளது.இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், முப்பது லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். அகவிலைப்படி உயர்வு, ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிகிறது.அடிப்படை சம்பளம் நீங்கலாக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.இதுவரை 80 சதவிகிதமாக வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி, இந்த உயர்வின் மூல் 90 சதவிகிதமாக உயரும்.இதற்கு முன் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி 8 சதவிகித அகவிலைப்படி உயர்வு உயர்த்தி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி