பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

பணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்கணிப்போம்.

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிக்குரிய படி வழங்கப்படாததால் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளை புறக்கணிக்கப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.தேர்தல் கமிஷன் உத்தரவின்படி
தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்காளர் பட்டியலில் திருத்தம், இடமாற்றம் போன்ற பணிகளை செய்ய முடிவு செய்து அப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆசிரியர் கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ராமகிருஷ்ணன் தாலுகா அலுவலகத்தில் நடத்தினார். அப்போது 2010லிருந்து 4 ஆண்டுகளாக ஆண்டிற்கு 10 தினங்கள் மொத்தம் 40 தினங்கள் தேர்தல் பணி ஆற்றியுள்ளோம். இதுவரைஇதற்கான படி வழங்கப்படவில்லை. எனவே தேர்தல் பணியை புறக்கணிக்கப் போகிறோம் என்று கூறினர். மீட்டிங்கில் பங்கேற்க மாட்டோம் என்றும் குரல் கொடுத்தனர். தாசில்தார் ராமகிருஷ்ணன் உடனடியாக பென்டிங் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்ததால் மீட்டிங்கில் கலந்து கொண்டு தேர்தல் பணி ஆற்ற சம்மதித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி