ஜூலை 1-ஆம் தேதி முதல், முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படிஉயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வால் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஆசிரியருக்கும் கூடுதலாக அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும் என தலைமைச் செயலகவட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் நேரங்களில் எல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம்.அதன்படி, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதே அளவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
எவ்வளவு கிடைக்கும்?
10 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் போது, மாதம்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தமிழகத்தில்12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், இந்த அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கிடைக்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி