தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணைந்து, தொடக்கப் பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை, உயர்நிலை கற்பித்தல் குறித்தசிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.ஒவ்வொரு மாதமும் 10 நாட் களுக்கு மேல் இப்பயிற்சி நடந்தது. இதில், சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தொடர் பயிற்சியால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது என்ற புகாரால் பயிற்சி நாட்களை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு ஒதுக்கிய நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டும், தொடர் பயிற்சியால்மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்கவும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை குறைக்க திட்டமிட்டனர்.மாதந்தோறும் 3 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் என, அனைவருக்கும் கல்வி இயக்கக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி