அக்.,25ல் மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2013

அக்.,25ல் மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டி.

பள்ளி மாணவர்களுக்கான மாநில தனித்திறன் போட்டிகள், அக்.,25ல், நெல்லையில் நடக்கிறது.6ம்வகுப்பு முதல் 12ம்வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவியரின்தனித்திறனை வளர்க்கும் பொருட்டு,
கட்டுரை (தமிழ், ஆங்கிலம்) பேச்சு (தமிழ், ஆங்கிலம்) கவிதை, பரதம், இசை, வினாடி-வினா, கிராமிய நடனம், பாட்டு, ஓவியம் ஆகிய 11 பிரிவுகளில், கல்வி மாவட்ட வாரியாக போட்டிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து வருவாய் மாவட்ட வாரியாக போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மூன்றாவது கட்டமாக மாநில அளவிலான போட்டி, அக்.,25ல், நெல்லையில் நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைபெறுவோருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி