கோர்ட் நடவடிக்கைகளில் தாமதம் கூடாது: கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2013

கோர்ட் நடவடிக்கைகளில் தாமதம் கூடாது: கல்வித்துறை உத்தரவு.

கோர்ட் நடவடிக்கைகளில், தாமதம் கூடாது" என அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அரசுக்கு எதிராக, ஆசிரியர்கள் வழக்கு தொடரும்போது, அதற்கு முறையாக,
அந்தந்த மாவட்ட கல்வித்துறை, பதில் மனுதாக்கல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், மேல்முறையீட்டில், காலதாமதம் செய்வது போன்றவற்றால், அரசுக்கு எதிராக, தீர்ப்புகள் கிடைக்கின்றன. இதை தடுப்பதற்காக, கோர்ட் வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உடனடியாக, பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.கல்விச் செயலரை பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட வழக்குகளில், அவரது பெயரை நீக்க, அரசு வழக்கறிஞர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இயக்குனர் பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட வழக்குகளில், மேல்முறையீடு குறித்து, காலதாமதமின்றி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என, தொடக்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி