பி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்பள வரம்பை ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2013

பி.எப். பிடித்தம் செய்வதற்கான சட்டப்பூர்வ மாத சம்பள வரம்பை ரூ.6,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவது குறித்து மத்திய நிதி அமைச்சகம் பரிசீலனை.

தற்போதுள்ள நிலையில் மாத சம்பள வரம்பில் 24 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கு சென்று
விடுகிறது. ஓய்வூதிய நிதிக்காக மத்திய அரசு 1.16 சதவீதத்தை மானியமாக வழங்குகிறது. பி.எப். பிடித்தம் செய்வதற்கான மாத சம்பள வரம்பை ரூ.15,000-ஆக உயர்த்துவதால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.90,000 கோடி கிடைக்கும்.இந்த நிதியை, இந்த அமைப்பு மத்திய அரசின் கடன் பத்திரங்கள்மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி நிறுவனங்கள் வெளியிடும்கடன்பத்திரங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. நம் நாட்டில் வங்கி சாரா நிதி துறையில் எல்.ஐ.சி.க்கு அடுத்தபடியாக இ.பி.எஃப்.ஓ. அமைப்பிடம்தான் அதிக நிதி உள்ளது. நிதி பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் மத்திய அரசு நடப்பு நிதி ஆண்டில் கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.4.84 லட்சம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. புதியவிதிமுறை அமலுக்கு வந்தால் இ.பி.எப்.ஓ. அமைப்பு மட்டும் கடன்பத்திரங்களில் கூடுதலாக ரூ.50,000 கோடி முதலீடு செய்யும். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து பி.எப். பிடித்தத்திற்கான சம்பள வரம்பை ரூ.15,000-ஆக உயர்த்தும்படி பாராளுமன்ற கமிட்டியும், இ.பி.எஃப்.ஓ. அமைப்பும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.இதனை நிதி அமைச்சகம் அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், இதனால் ஓய்வூதிய திட்டத்திற்கான மத்திய அரசின் மானியச் சுமை ரூ.1,100 கோடியிலிருந்து (ஆண்டிற்கு) கணிசமாக உயரும் என்ற காரணத்தினால் அதை ஏற்றுகொள்ளவில்லை.தற்போது இது குறித்து பரிசிலித்து வருவதாக செய்திகள் வருகின்றன இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி