இலவச லேப்-டாப் வினியோகம்: தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2013

இலவச லேப்-டாப் வினியோகம்: தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப்களை வினி யோகிக்கும் வரை தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு லேப்-டாப்,சைக்கிள் உட்பட 14 விலையில்லா பொருட்களை அரசு வழங்குகிறது. 2012-13ம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு லேப்-டாப் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.படிப்பு முடிந்து,சென்ற மாணவர்களை தேடி பிடித்து, உடனே வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என, சி.இ.ஓ.,க்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நடந்த தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டத்தில்,"லேப்- டாப் உள்ளிட்ட இலவச பொருட்களை மாணவர்களிடம் ஒப்படைக்கும்வரை, அவற்றிற்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பு. திருடு போனாலும் அதற்குரிய தொகை தலைமை ஆசிரியர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்" என சி.இ.ஓ.,, டி.இ.ஓ.,க்கள் எச்சரித்தனர்.தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், "நடப்பு கல்வியாண்டு மாணவர்கள் எனில் உடனே வழங்கிடலாம். 2012-13 என்பதால் சிலரை தேடிப்பிடிக்கவேண்டும். அதுவரை பாதுகாப்பாக வைக்கப்படும். ஆனாலும், சில பள்ளிகளில் வாட்ச்மேன்கள் இன்றி, மிகவும் கவனத்துடன் பாதுகாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி