பிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2013

பிஎப் வட்டி விகிதம் உயருகிறது.. மகிழ்ச்சியில் மக்கள்..!

ஓய்வூதிய நிதி அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) அதன் 5 கோடிக்கும் அதிகமானசந்தாதாரர்களின் வருங்கால வைப்புகளுக்கு,2012-13 நிதியாண்டில் வழங்கிய வட்டி விகிதம் 8.5
சதவீதத்தை விட இந்த நிதி ஆண்டில் உயர்வான வட்டி விகிதம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிநிறுவன (ஈபிஎஃப்ஓ) சந்தாதாரர்களின் பிஎஃப் வைப்புகளுக்கானவட்டி வருமான விகிதம் கடந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்ட 8.5% விட இந்த நிதி ஆண்டு சற்று உயர்வாக இருக்கும்" என ஒரு அறிக்கை கூறுகிறது. வட்டி வருமான விகிதம் 8.5 சதவிகிதத்தை விட சற்று உயர்வாக வழங்குவதால்,ஈபிஎஃப்ஓவுக்கு எந்தவித பற்றாக்குறையோ அல்லது உபரித் தொகையோ இருக்காது என் அவர் கூறினார். 2010-11 நிதியாண்டில் இந்த நிறுவன கணக்கில் ரூ. 1,761 கோடி காணப்பட்டதால்,வட்டி விகிதமாக 9.5% வழங்கப்பட்டது. இந்த வட்டி விகிதத்தை அங்கிகரிப்பதற்காக,நிறுவனத்தின் தலைமை தீர்ப்பாய அமைப்பான,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையிலான,சென்ரல் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் (சிபிடி)ஐ ஒருகூட்டத்துத்துக்கு அழைக்கும் செயல்பாட்டில் இந்த நிறுவனம்உள்ளது. சிபிடிக்கு வட்டி விகிதத்தை பரிந்துரைக்கும் ஈபிஎஃப்ஓவின் ஆலோசனை அமைப்பான,நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியை (எஃப்ஐசி) டிரஸ்டீ,இந்த கூட்டத்தின் போது மாற்றியமைப்பார். ஜூன் மாதத்தில் ஈபிஎஃப்ஓ மூலம் சிபிடி மாற்றியமைக்கப்பட்ட பின்னர்,ஈபிஎஃப்ஓவின் துணை-செயற்குழுக்களான எஃப்ஐசி போன்றவை கலைக்கப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த திட்டம் அங்கிகரிக்கப்பட்டவுடன்,நிதி அமைச்சர் முன்னிலையில் உடன்பாட்டுக்காக வைக்கப்படும். இந்த நிதியாண்டின் வருங்கால வைப்புக்கள் மீதான வட்டி விகிதம் தீபாவளிக்கு முன்னர் அறிவிக்கப்படலாம் என ஆதாரங்களின் படி தெரியவந்துள்ளது. இருப்பினும்,நடைமுறைப்படி இது நிதியாண்டின் ஆரம்பத்திலேயே அறிவிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த பல வருடங்களாக இது நடைபெறவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி