உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 13, 2013

உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியீடு.

முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான முடிவுகள் கடந்த 7ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக 1:1
விகிதத்தில் தேர்வர்கள் அழைக்கப்பட உள்ளனர்.பாட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி அவர்களுக்கான அழைப்புக் கடிதமும் இணையதளத்திலேயே வெளியிடப்படும் என்றும் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 14 மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிநடைபெற உள்ளது.www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பெயர் பட்டியலை தெரிந்து கொள்ளலாம். முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கான தேர்வு கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 2,881 பணியிடங்களுக்கு ஒருலட்சத்து 59 ஆயிரத்து 748 பேர் தேர்வெழுதினர்.

1 comment:

  1. Why TRB not released in the ratio of 1:2, pls tell the reason.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி