மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2013

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது. பதவி உயர்வைப் பொருத்த வரையில், 40 சதவீத இடங்களை அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டும், மீதமுள்ள 35 சதவீத இடங்களை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்புகிறார்கள்.மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) போட்டித் தேர்வு நடத்தும். காலி பணியிடங்களில், தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு என ஒவ்வொரு பாடத்துக்கும் இடங்கள்ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை படிப்பும், பி.எட். பட்டமும் பெற்றிருப்பவர்கள் டி.இ.ஓ. நேரடித்தேர்வு எழுதலாம்.முன்பு நேரடித் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து முதுகலை பட்டப் படிப்பு தகுதியில் ஆப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் கேள்விகள் கேட்கப்படும். அண்மையில், டி.என்.பி.எஸ்.சி.ஒட்டுமொத்தமாக குருப்-1, குரூப்-2, குரூப்-4 என அனைத்து தேர்வுகளையும் மாற்றியமைத்தது. அதில் டி.இ.ஓ. தேர்வும் மாற்றத்துக்குள்ளானது.புதிய தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகள் கொண்ட முதல்நிலைத் தேர்வு, அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வில் மொத்தம் 3 தாள்கள். பொது அறிவு சம்பந்தப்பட்ட 2 தாள்களும் விரிவான முறையில் பதில் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.3-வது தாளில் கல்வி மற்றும் கல்வி உளவியல் தொடர்பாக ஆப்ஜெக்டிவ் முறையிலான வினாக்கள் இடம்பெறும். கடைசியில் முன்பு இருந்து வந்ததைப் போல் நேர்முகத்தேர்வு உண்டு. இந்த நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களை நேரடித் தேர்வு மூலம் நிரப்புவதற்கு பாடவாரியான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.க்கு பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.நேரடியாக டி.இ.ஓ. பணியில் சேருவோர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (சி.இ.ஓ.), இணை இயக்குநர், இயக்குநர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.பணி அனுபவத்துடன் தகுதியும் திறமையும் இருந்தால் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக பதவி உயர்வு பெறவும் வாய்ப்பு இருக்கிறது. பதவி உயர்வில் வருவாய்த் துறை அல்லாத பிரிவின் கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வருவோரில் பலர் பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள்என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி