எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: கல்லூரிகளுக்கு கலெக்டர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2013

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது: கல்லூரிகளுக்கு கலெக்டர் உத்தரவு.

ஆதிதிராவிட மற்றும்பழங்குடியின மாணவ மாணவியரிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது" என, தனியார் கல்லூரி முதல்வர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு உத்தரவு எண்: 92 ன் படி, "ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின மாணவ மாணவியரிடம் கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது"என்ற நடைமுறை அமலில் உள்ளது. இருப்பினும், கோவை மாவட்டத்திலுள்ளசில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பயிலும் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிகத் தொகை வசூலிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன.இதோடு மட்டுமல்லாமல், அரசு நிர்ணயித்த பாடப்பிரிவுகளை ஒதுக்கீடுசெய்யாமல், சுயநிதிப் பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்ப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் வந்துள்ளன. இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இச்சூழலில் கலெக்டர் கருணாகரன், கோவையிலுள்ள கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கல்லூரி முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இதில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்திவிடுவதால், கல்லூரி நிர்வாகம், அவர்களிடம் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. இது தொடர்பாக, புகார்கள் வரும்பட்சத்தில் கல்லூரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என கலெக்டர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி