முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 28.11.2013 க்கு ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 21, 2013

முதுகலைப் பட்டதாரி தமிழ்ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 28.11.2013 க்கு ஒத்திவைப்பு.


்வழக்கு இவ்வாரம் மீண்டும் விசாரணைக்கு வரக்கூடும் என பலரும் எதிபார்த்திருந்த நிலையில் தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் இன்று( 21.11.2013) விசாரணைக்கு வந்தது.முதுகலைப்பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான
போட்டித் தேர்வில் A C D வகை வினாத்தாள்களக்கொண்டு தேர்வெழுதியவர்கள் சார்பில் வழக்கறிஞர் தாழைமுத்தரசு ஆஜராகி மறுதேர்வு நடத்துவதால் தேர்வெழுதியவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் தேர்வெழுதிய அனைத்து பிரிவினருக்கும் பிழையான 40 வினாக்களை நீக்கிவிட்டு 110 வினாக்களுக்கு மதிப்பீடு செய்யலாம் என்ற TRB யின் யோசனக்கு பதிலாக B வினாத்தாளில் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்து அதனை 150 மதிப்பெண்களுக்கு மாற்றி தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என தங்கள் தரப்பு கருத்துக்களை எதிர்மனுவாக தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் இன்று அஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன்பேரில் வழக்கின் அடுத்தவிசாரணையை 28.11.2013 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்இந் நிலையில் அடுத்த விசாரணையின் போதுதான் அரசின் நிலைப்பாடும் பிற எதிர்மனுதாரர்களின் நிலைப்பாடும் தெரியவரும்.

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நம்பிக்கை தான் வாழ்க்கை !

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. We are expecting a best solution that should not be affect/disturb the ACD Series.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி