வருங்கால வைப்பு நிதி முறைகேடு: தொடக்க கல்வி அலுவலர் இடைநீக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2013

வருங்கால வைப்பு நிதி முறைகேடு: தொடக்க கல்வி அலுவலர் இடைநீக்கம்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக, கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர் உட்பட,
மூன்று பேர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.சில மாதங்களுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூரில் தலைமை ஆசிரியை ஒருவர், தன் மகள் திருமணத்திற்காக தன் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 4.35 லட்சம் ரூபாயை எடுக்க விண்ணப்பித்தார். பணம் கிடைப்பது தாமதமானது. விசாரித்ததில், அவரது பணம் கருவூலத்திலிருந்து வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை.விசாரணையில், வேறு நபரின் பெயரில் அப்பணம் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். துறை ரீதியான விசாரணையில், ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி பணம் முறைகேடாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் கணக்கில் வரவு வைக்கப்படாமல், வேறு நபரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு மீண்டும் கடன் கேட்ட ஆசிரியரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இம்மோசடி தொடர்பாக, நேற்று முன்தினம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்சுகுமார், அலுவலக கண்காணிப்பாளர் சத்யவாணிமுத்து, எழுத்தர் ராதாகிருஷ்ணன்சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி