முதுகலை பட்டப் படிப்பில் இணையான பாடப்பிரிவுகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2013

முதுகலை பட்டப் படிப்பில் இணையான பாடப்பிரிவுகள்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், சில பட்டப்படிப்புகளுக்கு சமமானபாடங்கள் குறித்த தெளிவுரை வழங்கி
தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதன்படி சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., பொது மேலாண்மை (பப்ளிக் மேனேஜ்மென்ட்) படிப்பு, முதுகலையில் பொது நிர்வாகப் படிப்புக்கு (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) இணையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திண்டுக்கல் காந்தி கிராம பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., வளர்ச்சி நிர்வாகம் (டெவலப்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பும் (ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு), எம்.ஏ., பொது நிர்வாகம் (பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன்) படிப்புக்கு இணையானது.சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.எஸ்சி., பயன்பாட்டு புவியியல் (அப்ளைடு ஜியாக்ரபி) படிப்புக்கு இணையானது எம்.எஸ்சி., புவியியல் (ஜியாக்ரபி) படிப்பு. மேலும் சென்னை பல்கலையால் வழங்கப்படும் எம்.ஏ., தமிழ் இலக்கியப் படிப்புக்கு (தமிழ் லிட்டரேச்சர்) இணையானது எம்.ஏ., தமிழ் எனவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்தகவலை அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா அரசாணையாக வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி