வரும் டிச.,11 ல் ஒரு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கணித ஆர்வலர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2013

வரும் டிச.,11 ல் ஒரு சிறப்பு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கணித ஆர்வலர்கள்.


வரும் டிச.,11ல் ஒரு சிறப்பு இருக்கிறது. அந்த தேதி,மாதம்,ஆண்டை கூற வேண்டும் என்றால், 11.12.13என குறிப்பிடலாம். நூற்றாண்டுக்கு ஒரு முøறதான்11.12.13எண் கொண்ட தேதி வருகிறது. மீண்டும்
11.12.13(2113ம் ஆண்டு) தான் வரும்.

இது போல் தொடர்ச்சியான எண் கொண்ட தேதி01.02.03ல் (2103ம் ஆண்டு) வருகிறது. இது விசேஷமான தினம் என,எண்கணித நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி வரும் இவ்வேளையில், 11.12.13தேதியில் திருமணம் மற்றும் சுப ...நிகழ்ச்சிகளை நடத்த,பலர் திட்டமிட்டுள்ளனர். அதுவும்8.9.10மணிக்கு முகூர்த்தம் வைக்கவும் (8.9.10.11.12.13என வருவதால்) திட்டமிட்டுள்ளனர். தங்கம்,வெள்ளி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க பலர் திட்டமிட்டுள்ளதால்,அமெரிக்காவில் பல நிறுவனங்கள் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இத்தினத்தில் குடும்பத்தினர்,நண்பர்களுடன் செலவிடவும்,சுற்றுலா செல்லவும்,பலர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இத்தினத்தில் பிறக்கும் குழந்தைகள்,அதிர்ஷ்டம் செய்தவர்கள் என நியூமராலஜி நிபுணர்கள் கூறுகின்றனர்.11.12.13எண்களின் கூட்டுத்தொகை9.சீன கலாசாரத்தில்9அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது.9ம் எண்ணுக்கு"நீண்ட நாள் வாழ்க'எனும் அர்த்தமும் உள்ளதாம்.11.12.13தினத்தன்று14.15.16மணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவும் கணித ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி