பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்
கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார்.அவர் கூறியதாவது: அனைத்து பள்ளிகளிலும், 10 ம் வகுப்பு வரை, தமிழை மட்டுமே பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும். முதல் பாடவேளையில், நல்லொழுக்க கல்வி கற்பிக்க வேண்டும்.
கடந்த 2003 ம் ஆண்டுக்கு பின், பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் அறிவிக்க வேண்டும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முதுகலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த, அனைத்து வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்த வேண்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வில், அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தை, மேல்நிலை வகுப்பு வரை விரிவுபடுத்த வேண்டும். விலைவாசி உயர்வை கருதி, 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, அறிவித்த தேதியில் இருந்து, தமிழகத்தில் அமல்படுத்த முதல்வர் முன்வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி