பி.எட்., மாணவர்களிடம் பள்ளிகள் கட்டாய வசூல் : சிக்கலில் தலைமை ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2013

பி.எட்., மாணவர்களிடம் பள்ளிகள் கட்டாய வசூல் : சிக்கலில் தலைமை ஆசிரியர்கள்.


கற்றல், கற்பித்தல் பயிற்சிபெற்ற பி.எட்., கல்லூரி மாணவர்களிடம், பயிற்சி அளித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கட்டாய நன்கொடை வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில்
600 பி.எட்., கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பாடப்பிரிவுக்கு தகுந்தாற்போல், ஓராண்டு முதல் ஈராண்டு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஏதாவது ஒரு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் 40 நாட்கள் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுக்க வேண்டும்.அதன்படி, நடப்பாண்டில் அக்டோபர் முதல், டிசம்பர் முதல் வாரம் வரை பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பயிற்சி எடுத்தனர். பயிற்சி முடித்த மாணவர்களிடம், பயிற்சி அளித்த பள்ளிகளின், தலைமை ஆசிரியர்கள் கட்டாய நன்கொடை வசூலித்துள்ளனர். ஒரு சிலஅரசு உதவிபெறும் பள்ளிகளில் இருக்கைகள், லாக்கர்களுக்காக, ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூலித்துள்ளனர்.பி.எட்., கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், "நன்கொடை கொடுத்தால் தான், கற்றல், வருகை பதிவேட்டில் கையெழுத்திட முடியும் என தலைமை ஆசிரியர்கள் வற்புறுத்தினர். வேறுவழியின்றி நன்கொடை கொடுத்தோம்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி