அரசு பணியில் சேர டாக்டர்கள் தயக்கம்: காலியிடங்கள் அதிகரிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2013

அரசு பணியில் சேர டாக்டர்கள் தயக்கம்: காலியிடங்கள் அதிகரிப்பு.


ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தால், அரசு பணியில் சேர டாக்டர்கள் தயங்குகின்றனர் என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.அவர் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, 8, 15,17, 20 ஆகிய ஆண்டுகளில், தகுதி அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.இதற்கான உத்தரவை (அரசாணை எண்-245), அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, டாக்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புதிதாக துவங்கிய, சில மருத்துவக் கல்லூரி மருத்துவமனை களில் நர்ஸ், லேப் - டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணி பாதிக்கிறது. விரைந்து காலியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.புது அரசாணைப்படி, டாக்டர்கள் பதவி உயர்வு கவுன்சிலிங் முடிந்த பின், 2013டிசம்பருக்குள், டாக்டர்கள் இடமாற்ற கவுன்சிலிங் நடத்தி, உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

துறை வாரியாக, சிறப்பு டாக்டர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.அரசு பணியில் சேர்வதில், டாக்டர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. அதன் அடையாளமாக, சமீபத்தில் வெளியான சிறப்பு டாக்டர் நியமன அறிவிப்பின் போது, 1,000 காலியிடத்திற்கு, 300 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். மன அழுத்தம், பணிச்சுமை போன்றவற்றை கருதி பயந்து, பணிக்கு வர தயங்குகின்றனர். பற்றாக்குறையை தவிர்க்க, விரும்பி பணியில் சேரவரும் சிறப்பு டாக்டர்களை, உடனே பணியில் சேர்த்துக் கொள்ளலாம் என உத்தரவை பெற்றுள்ளோம். குறிப்பாக மயக்கவியல், மகப்பேறு பிரிவுகளில் பணிபுரிய டாக்டர்கள் தயங்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி