ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விகிதம் இப்போதும் இவ்வளவுதான்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி விகிதம் இப்போதும் இவ்வளவுதான்!


மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. எழுதியது ஆறரை லட்சம் பேர். தேர்ச்சி பெற்றது 27 ஆயிரத்து 92 பேர் மட்டுமே. அதாவது தேர்ச்சி விகிதம்
4.21 சதவீதம்தான்.அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்.

அதற்காக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுஜூலை 12-ஆம் தேதி, ஆசிரியர் தகுதித் தேர்வு, முதல் முறையாக நடைபெற்றது. 6.76 லட்சம் பேர் எழுதிய அந்தத் தேர்வில் 2,448 ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதன் தேர்ச்சி விகிதம் 0.36சதவீதம்தான். தேர்வு நேரம் போதவில்லை என்று தேர்வு எழுதியவர்கள் குறை கூறினார்கள். இதைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக படித்து முடித்தவர்களுக்கும் ஏற்கெனவே விண்ணப்பிக்காதவர்களுக்கும் சேர்த்து கடந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அத்துடன், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக அதிகரித்தது. மறு தேர்வு எழுதிய 6.56 லட்சம் பேரில் தேர்ச்சியடைந்தவர்கள் 2.99 சதவீதம் மட்டுமே.

கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வை 6.6 லட்சம் பேர் எழுதினர். இதில் 27,092 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்தேர்ச்சி விகிதம் 4.21 சதவீதம் மட்டுமே. முதல் தாள் எழுதிய 2.62 லட்சம் பேரில் 2,908 ஆண்களும் 9,688 பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணிபுரிவதற்குரிய தகுதித் தேர்வான முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் 4.80 சதவீதம் பேர். ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இரண்டாம் தாளை எழுதிய 4 லட்சம் பேரில் 4,835 ஆண்களும்9,661 பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிவதற்குரிய தகுதித் தேர்வான இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் 3.62 சதவீதம். இந்த இரண்டு தாள்களிலும் பெண்கள்தான் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு எழுதிய 7,991 பேரில் 1.4 சதவீதம் பேரே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் ஐந்து சதவீதத்தைக் கூட எட்டமுடியாமல் இருப்பது, ஆசிரியர்களின் தரத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது. இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் தேர்ச்சி இருந்தால் ஆசிரியர் பணிக்கான டிப்ளமோ மற்றும் பட்டப் படிப்புப் படித்த ஆசிரியர்கள்அனைவரும் எப்போது இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள்? எப்போது வேலை பெறுவார்கள் என்பதுதான் இப்போது நம்முன் நிற்கும் கேள்விக்குறி.

16 comments:

  1. aammmmmmmmmam mudichavangalukku velai kodukkave mudila apram yen percentage patri solluringa

    ReplyDelete
    Replies
    1. good question 27,000 pass aanathuka intha thenaru thenaranga 6 lakhs um pass paninagana avalathan government and trb

      Delete
  2. Correct ah sonneenga... Ivlo kelvi kettum endha reaction um illa pa..

    ReplyDelete
  3. Sir I am Application For Re- Correction For TRB My mark 89 Ethachum Terrvu Kidaikuma

    ReplyDelete
  4. I have got 113 in TET (English) cut off 79. Is TC important for CV ? I am doing M.A II year, 3 semesters got over. If TC is important, I have to discontinue my course. But I have got course certificate from the college. All the information like -date of birth, Father's name and conduct is given in the course certificate. Is it enough for CV instead of TC? Concern authorities please answer me.

    ReplyDelete
    Replies
    1. TC is not important. U can very well continue ur M.A degree if you get the order u just discontinue ur M.A and join in the correspondence course. Be cool man. Advance congratulations for ur job.

      Delete
  5. once upon a time dted enbathu kouravamigga course aga irunthathu.diet and aided techer training college mothama one yearla 4000 teachers than vanthanga.eppa license koduthu privatela arambikkka sonnangalo appave ithu oru business agivittathu.4000 teachers students veli vantha nerathula 40000 teachers students velivanthanga.next yearla 50000, next yearla 60000 ena increase agite pochu.
    Itharku karanam yaru the government.+2 1000 mark mela eduthavanga mattume padithu kondiruntha intha course ellarum padikka anumathi koduthathu yaru.privatela 100000 and 150000 rs koduthu sila per padichanga.govt diet il 7000 rs muditha intha course ivalvu thogaiya koduthu mudithanga.pala per sontha nilam,veedu anaithaiyum vithu parents padika vachanga enn.enravathu oru nal namathu pillaiyum government schoola teachera work pannum entra kanavu than.parents ippadi thangal earning capacityaum meeri dted padikka vaithathuru karanam seniority kanippa velai undu entra karanam than.
    Padikkum pothu tet exam ontru irukku entrum,athil thaguthi peruvathu kadinam entrum therinthirunthal pala per 200000 rs semithu vaithurupargal. Itharkellam yar karanam yar entral nam thaliveethi entru koorinal athu muttalthanam. Yar entru ungalukku thrium.

    Mela sonnathu palaya kathai.ippothu puthu kathai.thaguthi thervil therchi sathaveetham kuraivaga irukirathu entru kurukerirgale. 500 mark eduthavargalum 200000 katti konjam kastapatu padithal dted patithuvidalam. Anal intha mathiri thaguthi thervil therchi peruvathu kadinam.(soory friends yaraium nan kevalama pesala ithu than unmai entru anaivarukkum thorium)
    Ippadi theriyathu appavigalidum mudinta varai kasai karanthu kondu padikkum pothu thakuthi thervaiyo,weightage mark patriyo ethayume kooramal thidenru therchi sathaveetham kammiya irukiathu entru koorinal ena entru solvathu.

    Ungali pontru 200000 panam katti valkkaiya tholaithu thorium unamutra oruvan.


    ReplyDelete
  6. The guys who failed in 1 & 2 marks are more that 600 people this year........ due to wrong answer keys........

    ReplyDelete
  7. first upon we should understand the exam pattern, tet paper 2 science people wrote the exam in all papers example tamil, english, maths, science, psychology, if Pg people wrote only their subject, if bt teachers may be permitted to as his own subject examination, they will definitely succeed his own subject, but our current exam pattern is testify the bt science teachers knowledge in tamil, english, maths knowledge, so the bt teachers could not achieve the percentage of mark in the examination. when the government will be permitted the bt teachers write the examination in.their own subject only they will definitely achieve their percentages in the examination.

    ReplyDelete
  8. paper 2 pass candidates register their tet mark statement in the employment register office
    is it true ? pls ans me

    ReplyDelete
  9. Romba feel pannatheenga... Ivlo thaan pass pannirukaanga nu... First pass pannavangalukku vela tharangala nu paarunga... Apram pass percentage pathi kavala padalaam...

    ReplyDelete
  10. i am B.sc microbiology .i got 90 marks in TET. whether i am eligible or not

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி