இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2013

இளங்கலை பட்டம் முடித்தவர்கள் ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களைப் படிக்க முடியாது- தொடக்கக்கல்வித் துறையின் RTI Letter.


RTI-யின் பதில் ஏற்படுத்திய நம்பிக்கையின்மை:


இளங்கலை பட்டம் பெற்றவர்கள்

ஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை, வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் ,வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் (நேரத்தில்) தேர்வு எழுதி முடித்திருந்தால் அதை பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை பலருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் அளித்துள்ளது..

ஆனால்,தொடக்கக்கல்வித் துறையோஒரே கல்வியாண்டில் இரண்டு பட்டங்களை படிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது..

ஏன் இந்த முரண்பாடு..?
இது RTI-ல் கொடுக்கப்பட்ட தவறான தகவலினால் ஏற்பட்ட முரண்பாடா...?

இல்லை,இரு துறையிலும் உள்ள வேறுபட்ட விதிமுறையினால் ஏற்பட்ட முரண்பாடா..?

எது உண்மை...தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த இந்த முரண்பாடான தகவலினால் RTI-ல் வழங்கப்படும் தகவல்களின் மீதும் ஆசிரியர்களின் மத்தியில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது..

இதில் நமக்கு ஒரு தெளிவு பிறக்க நாம் நீதிமன்றத்தை நாடவேண்டிய கட்டாயத்திற்க்குத் தள்ளப்பட்டுள்ளோம் தோழர்களே..

தோழமையுடன்,தேவராஐன், தஞ்சாவூர் .

1 comment:

  1. i was told by a educator that two master degrees can be done in a same academic year after u.g degree. when a person doing u.g, s/he is not eligible to do two degrees.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி