பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், பொது டெட் தேர்வுகளுடன் 2027-ம் ஆண்டுக்கான டிஆர்பி வருடாந்திர தேர்வு அட்டவணை முழு வீச்சில் தயாராகி வருகிறது.
ஓராண்டில் நடைபெற உள்ள தேர்வுகள், அதற்கான அறிவிப்பு வெளியாகும் நாள், தேர்வு நாள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடிய வருடாந்திர தேர்வு அட்டவணையை (Annual Planner) ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
அந்த வகையில், 2027-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணை தயாரிப்பு பணியை டிஆர்பி முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. அதில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர் (பிஇஓ), தேர்வுகள், பொது டெட், சிறப்பு டெட், உடற்கல்வி ஆசிரியர் என பல்வேறு தேர்வுகள் இடம்பெற இருப்பதாக டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன. டிசம்பருக்குள் அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்வு அட்டவணையில் பட்டதாரி ஆசிரியர், பொது டெட், ஸ்லெட், முதல்வர் ஆராய்ச்சி உதவித் தொகை (ரிசர்ச் ஃபெலோஷிப்) தேர்வு உட்பட 7 தேர்வுகள் இருந்தன. அதில் ஒரு தேர்வுக்கான அறிவிப்புகூட இதுவரை வெளியிடப்படவில்லை.
டிஎன்பிஎஸ்சி போல, டிஆர்பியும் வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, குறித்த காலத்தில் தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை விரைந்து நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2026 அட்டவணைப்படி, பொது டெட் தேர்வுக்கு பதிலாக, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு சிறப்பு டெட் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சிறப்பு டெட் தேர்வு டிசம்பரில் நடத்தப்பட உள்ளது. முதல்வர் ஆராய்ச்சி உதவித் தொகை தேர்வை இந்த ஆண்டுக்குள் நடத்த டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி