எழுதப்பட்ட ரூபாய்க்கு தடையா : ரிசர்வ் வங்கி விளக்கம் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2014

எழுதப்பட்ட ரூபாய்க்கு தடையா : ரிசர்வ் வங்கி விளக்கம் !


ரூபாய் நோட்டுகளில் பேனா மற்றும் பென்சிலால் கிறுக்கப்பட்டிருந்தால் அவை வாங்கப்பட மாட்டாது என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரூபாய் நோட்டுகளின்
வெள்ளை பகுதியில் எண்ணோ அல்லது கையெழுத்து போன்ற கிறுக்கலோ அல்லது வாசகமோ இடம்பெற்றிருந்தால் அது செல்லாது என்றும், 2014 ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு இந்த நோட்டுகள் வங்கிகளில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற தகவல் பரவி வருகிறது.

இத்தகவல் வெறும் வதந்தி என்றும் இதனால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. இத்தகைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும், மக்கள் வழக்கம்போல இவற்றை வாங்கலாம், கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.பேனாவால் கிறுக்கப்பட்ட வாசகம் இடம்பெற்றுள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாதுஎன்று எத்தகைய சுற்றறிக்கையையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி