மேல்நிலைப் பள்ளி களில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், ஓர்ஆசிரியர், இரண்டு பள்ளிகளில் பாடம் நடத்த, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதனால்,
பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம் கேள்விக்குறியாகி உள்ளது.தகுதித் தேர்வை காரணம் காட்டி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றிய, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை, அரசு, 'டிஸ்மிஸ்' செய்தது. இதனால், பள்ளிகளில், கம்ப்யூட்டர் பாடம் கற்றுக் கொடுப்பதில், மாநில அளவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால், ஒரு பள்ளியில் பணியாற்றும், கம்ப்யூட்டர்ஆசிரியர், மற்றொரு பள்ளியில், கூடுதல் பணியாற்ற வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு,அடுத்த மாதம், கம்ப்யூட்டர் செய்முறை தேர்வு, மார்ச் மாதம் பொதுத்தேர்வுநடக்கிறது. ஆனால், தேர்வுக்கு முன், பாடத்திட்டங்களை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் விழி பிதுங்கி உள்ளனர். பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் ஆசிரியர் இல்லாததால், வேறு பாடம் நடத்தும்ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பாடம் நடத்துகின்றனர். இதனால், மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால்,கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி விகிதம், இந்தாண்டு, கடுமையாக பாதிக்கும். தகுந்த முன் ஏற்பாடு இல்லாமல், ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ததால், பெரிய விளைவை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் கூறியதாவது:
மேல்நிலைப் பள்ளிகளில், ஏற்கனவே, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.இதில், அரசு நலத்திட்டங்கள், பயன் பெற்ற விவரம், ஆன் - லைன் பணிகள் உட்பட, அனைத்து தகவல் தொழில்நுட்ப பணிகள், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், 'தலையில் தான்' விழுகின்றன. இதற்கிடையே, இரு பள்ளிகளில் பணியாற்ற வேண்டிய உத்தரவுஅதிர்ச்சியாக உள்ளது. இதனால், பாடம் நடத்தும் சூழ்நிலை எங்களுக்கு இல்லை;மாணவர்களின் கற்றலும் பாதித்துள்ளது. பொதுத் தேர்வில், இதன் வெளிப்பாடு தெரியும். தேர்வு நெருங்கும்நேரத்தில், மாணவர்கள் நலன் கருதி, டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியர்களை தற்காலிகமாக அழைத்து, மீண்டும்பாடம் நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
COMPUTER TEACHER govt schoola potta Poor Student Knowledge valanthurum, appuram PVT School la Kasu Kolla Adida Mudiyathu. Athan Govt Ealai Ealaiyavey irrukatum, Panam Ulla pasanga mattum pvt schoola computer padikattumnu Entha Nadavadikaiyum Eadukala.
ReplyDeletecomputer tr ku pathila irukkura trs ku trainong kudutha ppthum computer ku separate tr thevaillai
DeleteDai Muttal. Comp Sci Ku Other Techr pothum na. Our School ku our tchr pothum da ella subjt eaduka. unna pola irukuravan govt la irrukurathala thanda ella govt school la moodura nilai varuthu. mutta payaley.... kandipa ne tchr ha irruka chance illa da. Cmd time 7.49 PM
ReplyDeleteethu padicha govt service ku varalamnu kuda therima padikira janmam.posting ketkak kudathu.po po poi maths.english.tamil ethavathu padi.illana ippadithan polampitturupe.sariya.illai na TNPSC eluthu
Deleteகணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ 190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிகின்றனர்.
ReplyDelete11,12 ம் வகுப்புகளுக்கு கணிப்பொறி அறிவியல் ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது, ஆனாலும் புதிதாக தரம் உயர்த்தப்படும் மேல்நிலைப்ப்ள்ளிகளில் கணிப்பொறி அறிவியல் தவிர ஏனைய 9 பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. அரசு நடுநிலை,உயர்நிலை பள்ளிகளுக்கு கணிப்பொறிகள் வழங்கப்பட்டு உபயோகப்படுத்தப்படாமல் மூலையில் கிடக்கின்றன, பாடம் நடத்த ஆசிரியரும் இல்லை, மாணவர்கள் பயன்படுத்த அனுமதியும் இல்லை.மேல்நிலைப்பள்ளிகளில் இன்னும் மோசமான நிலை தொடர்கிறது, கணிப்பொறி அறிவியல் பாடத்தினை வேறு பாட ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.
2010 ல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு படி இனி வரும் காலங்களில் கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்தவர்கள் மட்டுமே அரசுப்பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியராக பணிபுரிய முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பகுதி நேர சிறப்பசிரியர் நியமனத்தில் இது பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.தனியார் பள்ளிகளில் பணிபுரியும் கணிப்பொறி ஆசிரியர்களின் நிலை இன்னும் கொடுமை.இங்கே கணினி ஆசிரியர் என்பவர் டைப்பிஸ்ட், ஆபீஸ் பாய், அலுவலக உதவியாளர் போன்ற வேலைகளை கட்டாயம் செய்ய வேண்டி உள்ளது. ஏனெனில்,சான்றிதழ்களை ஒப்படைத்து விட்டு அடிமைகளாக நியமிக்கப்படுகிறோம்.
கல்வியியல் கல்லூரிகள் தங்கள் பங்கிற்கு, கணிப்பொறி அறிவியல் பாடத்தில் B.Ed., முடித்தவர்கள் மிகவும் குறைவு, ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் விகிதத்தில் நியமித்தாலும் அனைவருக்கும் வேலை நிச்சயம் என விளம்பரங்கள் தருகின்றன. ஆனால் எங்கள் நிலை இன்றும் தெருவில்தான் என்பது இன்னும் கணிப்பொறியில் B.Ed., படிக்க ஆசைப்படுவோர் புரிந்துகொள்ளவேண்டும்.
கடந்த முறை நடந்த AEEO தேர்விற்கு குறைந்த பட்ச தகுதியாக ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டத்துடன் B.Ed., என்பது கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கணிப்பொறி அறிவியல் தவிர அனைத்துப்பாடங்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஏன் எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு?கணிப்பொறி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்படுவோர் கணினி பயிற்றுனர் என்ற பதவியில் பணிபுரிகின்றனர். மற்ற அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் இளநிலை முடித்தோர்க்கு பட்டதாரி ஆசிரியர் என்றும், முதுநிலை முடித்து பணிபெறுவோர்க்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் என்றும் பதவி உள்ளது. இதுலும் பாரபட்சம் ஏன்?இப்படி நாங்கள் அனைத்து தரப்பிலும் ஒதுக்கப்பட்டு தவிக்கின்றோம்.சரி இவை போகட்டும் கணிப்பொறி அறிவியல் பாடம் தொழிற்கல்வி என்றால், சிறப்பாசிரியர் நியமனத்திலாவது கணிப்பொறிக்கு இடம் வரும் என காத்திருந்தோம் அதிலும் கிட்த்தது நாமம் தான்.
கடந்த வருடங்களில் உடற்கல்வி, ஓவியம், தையல் போன்ற பாடங்களுக்கு சிறப்பாசிரியர் நியமனத்தில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதிலும் கணிப்பொறிக்கு இடம் இல்லை.கடந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வினை அரசு அறிமுகம் செய்தது, அதில் மற்றவை(OTHERS) என்ற பிரிவில் கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வினை எழுதினோம், சில பேர் அதில் தேர்ச்சியும் பெற்றனர். ஆனால், சன்றிதழ் சரிபார்ப்பின் போதே “ உங்களை யார் தேர்வு எழுத சொன்னார்கள்?” என்று வேண்டா வெறுப்பாக சரிபார்த்து அனுப்பப்பட்டுள்ளனர். சரிபார்ப்பு முடிந்து தேர்வானோர் பட்டியலில் கணிப்பொறி ஆசிரியர் பெயர் NOT SELECTED என இடம் பெற்றது அதற்கு விளக்கமளிக்கும் விதமாக REMARKS ல் Computer Science என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ஏன் தேர்வெழுத எங்களை அனுமதிக்க வேண்டும்? கணிப்பொறி ஆசிரியர்கள் குறைந்தது 10,000 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதியிருப்போம்.6 முதல் 8 வரை வகுப்புக்களுக்கு கணிப்பொறி பாடம் இல்லாத பொது தேர்வெழுத வேண்டுமா நாங்கள்? அவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் 50 ரூ, தேர்வுக்கட்டணம்500ரூ ஆசிரியர் தேர்வாணையம் இதனை திருப்பி தருமா? ஆசிரியர் தகுதித் தேர்வினை யார் யார் எழுதலாம், யார் எழுத வேண்டாம் என்பதை தெளிவாக அறிவிப்பது யாருடைய கடமை? தேர்ச்சி பெற்றோருக்கு அரசின் பதில் என்ன?கணிப்பொறி அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்படும் நாங்கள் கணிதம் மற்றும் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பாடத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று கணிப்பொறி அறிவியல் பாடம் போதிக்க வேண்டுமா? எங்களுக்கு TET-ஆ இல்லை பதிவு மூப்பு அடிப்படையில் நியமனமா என்பதையாவது தெளிவாக கூறவேண்டும் அல்லவா?
இனியும் கணிப்பொறி அறிவியலில் B.Ed., தேவையா? எங்களது கோரிக்கைகளை கருணை மனுவாகவாவது ஏற்குமா அரசு?
computer science college le poi padipan.irukura subject ku posting potta pothum. avargal parthupargal.ama neenga ethuku B.ed padichimga
ReplyDeleteNe 100% Mutta payanndartha nirubichita da. kasu irrukuravan thanda college poi padipan. 10th +2 la pathiya nikkuravanuku eappadi da computer knowledge varum. athan pvt school thedi poragnga ellam. Ippo ella office workum computer knowledge mukkiyam da muttal. tnpsc 10th qualification ku computer knowledge illama evlo work pending irrukunu theriyumada mutta payalea..... mutta payala....
DeleteNe 100% Mutta payanndartha nirubichita da. kasu irrukuravan thanda college poi padipan. 10th +2 la pathiya nikkuravanuku eappadi da computer knowledge varum. athan pvt school thedi poragnga ellam. Ippo ella office workum computer knowledge mukkiyam da muttal. tnpsc 10th qualification ku computer knowledge illama evlo work pending irrukunu theriyumada mutta payalea..... mutta payala....
Deletelooso loose. nan sonnathu unakku purila.irukkure bt ku training kudutha pothum.basic sollikudupanga.ninga vanthu onnum kilikathinga.poi pvt school le job pannunga.
ReplyDeletesir and madam epavume onnu purinjikonga. tamil teacher maths edukalam, maths teacher edukalam ana maths major padichavanga dhan maths subject nooks and corners simple terms and simple methods solli thara mudium.likewise tamil padichavanga dhan puranur la irundho ila silapadhikaram la irundho merkol katta mudium. ipa iruka technology world la verum computer basic matum therinja podhadhu. pvt schoola thaniya comp teacher appnt pandravanga muttal ila. students future bright irruka ela oppurtunities um tharanga . as a govt teacher namma pasanga future a nammale spoil pana kudadhu. namma andha timela namma subject a cconcentrate pani solli tharalam as a teacher namma mathavangaluku role model ah irukanum.matha teachers an respect pananum.
Deleteeduthadhume elam govt schla job kedaikaradhu ila . elam pvt shcl le work panitu dhan varanga. so govt or pvt teacher we should have some dignity. try to keep that.
Delete