ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண், கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் - முதல்வர்


முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமூக நீதிக்கு சவால் விடப்பட்ட போது,சமூக நீதியினைக்காக்கும் பொருட்டு ஒரு சட்டத்தினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றி,

அந்தச் சட்டத்தினை1994ஆம்ஆண்டு அரசமைப்பு (76ஆவது திருத்தம்) சட்டத்தின் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கச் செய்து, 69சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து,சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும்,என்னையுமே சாரும்.இதே போன்று,ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப் படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். மத்திய அரசின் உத்தரவுப்படி,ஆசிரியர் தகுதித் தேர்வுநடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும். எனவே,ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில்18,647ஆசிரியர்கள் மற்றும் போட்டித் தேர்வின் மூலம்2,273ஆசிரியர்கள் என மொத்தம்20,920ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்,கல்வித் தகுதி மற்றும் கல்வியியல் பட்டப் படிப்பில் பெறப்பட்ட மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது,பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு தான். கல்லூரி ஆசிரியராக பணியமர்த்தப்பட‘ஷிலிணிஜி’மற்றும்‘ழிணிஜி’தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எவ்வாறு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதோ,அதே போன்று தான் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் மத்திய அரசால் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தான் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. இந்த ஆசிரியர் நியமனத்தில்69விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை கருணாநிதிக்கு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

2014ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் அ.தி.மு.க. கொள்கைகள் மத்தியஅரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும் போது,உச்ச நீதிமன்ற ஆணையினை மாற்றும் வகையில் உரிய திருத்தங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் கருணாநிதிக்குதெரிவித்துக் கொள்கிறேன்.மொத்தத்தில், “அத்திப் பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு”என்ற பழமொழிக்கேற்ப கருணாநிதியின் அறிக்கையை படித்துப் பார்த்தால் அத்தனையும் புளுகு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.‹

13 comments:

  1. ammave weightage mark thanu sollitanga aana 90 markum 104 mark um equal nu soldrathu romba kashtama iruku weightage mark kuda pirichi podalam
    90 to 95 42 marks
    95 to 100 45marks
    100 to 105 48 marks
    ippadi pirichi pota nalla iruku 90 to 105 42 mark endral tet mark ku madhipu illamal plus two mark mattum mukithuvam perum adhoda old age above 40 candidates bathika paduvargal ammavin kavanathirku ithu selluma nalla padhil varuma

    ReplyDelete
    Replies
    1. boss... +2 la 860 is equal to 1080... ithu evlo kastamo athu pola than athuvum,,, ovvonnu orutharuku saathagamum, baathakamum aaga thaan irukum. so dont worry mr... 10% ku consider panranga.. avlo than..

      Delete
  2. Idhu enna sir chinna pullathanama illa .... Schoolla epdi grade podrom.
    91 to 100. - A1
    81 to 90. -A2 ipdidhane indha basic logic kuda puriyama epdi sir CCE handle pan a poreenga. Nan kudadhan B.Ed LA 86% adhukunu 70 - 80% oru mark above 80% oru mark una sir podamudiyum. Namakku munnadi vaikapadra Ella challengayum odaikuradhu dhan sir veeram. Polambadheenga potti podunga. Ungaluku sadhagamave think pannadheenga. Idhu competitive world sir only the fittest can survive here. Tet is...survival of the fittest. 12 mark kamminu theriyumla above 105 eduka vamdiyadhudhane. Summa thottathukkum kora sollikittu.

    ReplyDelete
    Replies
    1. Very good sir. Idha madiri badhil sonnadhan ivangaluku konjamavadhu veeram varum. Neenga endha district sir.

      Delete
  3. Entha atchiyilavathu Trb ya sudhandhirma seyalpadavidu vangala , panam, recommendations, katchikaranga
    Thondharavu illama meritla arivuku matume mukiyathuvam koduthu vaylai kodukaporanga
    Avangala puhalana kuda parava illa puluvadhinga puluvuninga
    Unga vaila puluvuthan vaikum
    Amma neengal pallaandu valndhu
    Elaie makalum arivalihalukum
    Udhavavendum ungalai valthavaiyadhilai vanaguhiren
    Nandriudan,,,„= Ethir katchi karan

    ReplyDelete
  4. CM THE BRAVE HEART..

    ReplyDelete
  5. //2014ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் அ.தி.மு.க. கொள்கைகள் மத்தியஅரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.//

    உருவாக்குவோம்.

    ReplyDelete
  6. My no 13TE 63206360 my marks pls

    ReplyDelete
    Replies
    1. Mark paakra linga thookitanga friend.

      Delete
  7. Why govt not considering weight age to senirioity and experience like PG appointment.I have 13 years experience and 14 yrs seniority.

    ReplyDelete
  8. //2014ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின் அ.தி.மு.க. கொள்கைகள் மத்தியஅரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும்.//

    உருவாக்குவோம்.

    ReplyDelete
  9. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  10. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி