ஆசிரிய சகோதர, சகோதரிகள் வரன் அமையாமல் தேடுதல் வேட்டையில் பல மாதங்களாக காத்திருக்கின்றனர்.ஏன் சில, பல வருடங்கள் கூட ஆகிறது வரன் அமைய பெரும்பாலும் ஆசிரியர்கள் தனது வாழ்க்கைத் துணையும்
கல்வித்துறையைச்சார்ந்தவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அனைவரும் அறிந்த ஒன்றே..
நமது நட்பு வட்டாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து ஒன்றியங்களிலும்உள்ள ஆசிரியர்கள் உள்ளனர்..
நாம் நினைத்தால் பலரின் எண்ணம் போல் வாழ்க்கை அமைய உதவி செய்ய முடியும்...
நாம் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை...
என்ன நாம் எதையும் நினைப்பதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்...
ஆசிரிய வரன் தேடுபவர்களுக்குஉதவும் வண்ணம் இந்தக் குழுவினை ஆரம்பித்துள்ளேன் தோழர்களே..
இதில் 1% கூட சுயநலம் ஏதும் இல்லை..
உங்கள் அனைவரின் எண்ண ஓட்டத்தையும் என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது தோழர்களே..
இதில் பல பிரச்சணை உள்ளது அது தானே..?எதில் தான் பிரச்சணை இல்லை..
பெண் ஆசிரியர்களைப் (மணப்பெண்) பற்றிய தகவலைப் பதிவு செய்வதில் தான் அனைத்து பிரச்சினையும் ஆரம்பிக்கிறது.ஆகையால் மனப்பெண் பற்றிய விபரங்களை அவர்களின் அனுமதியின்றி (பெற்றோர்) வேறுயாரும் பகிர வேண்டாம்.
>பெண் ஆசிரியர்களின் தொலைபேசி எண், முகவரி , பணிபுரியும் இடம் ஆகியவற்றைப் பொதுவில் தயவு செய்து பகிர வேண்டாம்.
>மணமகன் தேடுபவர்கள் பெற்றோரின் தொலைபேசி எண்ணை மட்டும் பதிவு செய்தால் போதுமானது.மணமகள் தேடுபவர்கள்...
மணமகனின் முழு விபரங்களையும் பகிரவும்.. (விரும்பினால் புகைப்படத்துடன்பகிரவும்)
1.பெயர்,
2.பிறந்த தேதி,
3.வேலை,(அரசு/தனியார்)
4.பதவி,
5.பணிபுரியும் இடம்,
6.ராசி, நட்சத்திரம்,
7.மதம்,
8.ஜாதி,
9.முகவரி
10.தொலைபேசி எண
11.மாத வருமானம்
மேற்கண்ட விபரங்களை பகிர்வதன் மூலம் மணமகள் வீட்டார் தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.ஆண் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்வதால் சிக்கல் எதுவும் ஏற்படப்போவதில்லை...
ஆண் ஆசிரியர்கள் விபரங்களை பதிவு செய்தாலே எளிதில் வரன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள யாரேனும் ஒரு தோழருக்கு இதில் பகிரப்படும் வரன்கள் எப்படியும் தெரிந்துவிடும்.இவர்கள் மூலம் கண்டிப்பாக உடனடியாக வரன் தேடுபவர்களுக்கு தகவல் விரைவில் சென்றுவிடும்..
எனவே இதில் பகிரப்படும் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வெகு விரைவில் வரன் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது..
இதை பயனுள்ள வகையில் பாதுகாப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு...
வரன் தொடர்பாக என்னை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம்..
இந்தக் குழுவின் நோக்கம் நிறைவேற உங்கள் அனைவரின் உதவியும், ஒத்துழைப்பும் தேவை..
இந்தக் குழுவில் இணைந்து சேவை புரிய விரும்புபவர்களும்,வரன் தேடுபவர்களும் கீழே உள்ள link-ஐ click செய்யவும்....
Teacher Matrimony ~ஆசிரியர் வரன்கள்~
தோழமையுடன்,
தேவராஜன் ,தஞ்சாவூர்.
I really proud of you sir....my warm greetings to and your service...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete