எஸ்.எம்.எஸ்.,சில் வாக்காளர் விவரம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

எஸ்.எம்.எஸ்.,சில் வாக்காளர் விவரம் : தேர்தல் கமிஷன் ஏற்பாடு.


வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிந்து கொள்ளும் வசதியை, தேர்தல் கமிஷன் ஏற்படுத்தி உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அறிய
விரும்புவோர், "epic' என டைப் செய்து, "ஸ்பேஸ்' விட்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண்ணை, டைப் செய்து, 94441 23456 என்ற எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., செய்ய வேண்டும். அவ்வாறு செய்வோருக்கு, தொகுதி பெயர், அவரது பெயர், தந்தை பெயர், முகவரி, வாக்காளர் பட்டியல் பாகம் எண், பெயர் வரிசை எண், ஓட்டுச்சாவடி எண், போன்ற விவரம் தெரிவிக்கப்படும். வாக்காளர் பட்டியலில், பெயர் இல்லாவிட்டால்,"நோ ரெக்கார்ட்ஸ் பவுண்ட். டயல் 1950' என்று வரும். அந்த எண்ணுக்கு போன்செய்து, விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வசதி, நேற்று பகல், 12:00 மணிக்கு, அமலுக்கு வந்தது. இதற்காக, தேர்தல் கமிஷன், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்துள்ளது. எந்த மொபைல் போனிலிருந்தும், எஸ்.எம்.எஸ்., செய்யலாம்.

2 comments:

  1. "ஞுணீடிஞி'

    இது என்ன ஐயா!

    சற்று விளக்குங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி