தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும்: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும்: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார்


"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர். போதிய அரசு ஊழியர் இல்லாத மாவட்டங்களில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களை பணியமர்த்த, தேர்தல் கமிஷன், அனுமதி வழங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களை, அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து, இரண்டு மணி நேர பயண தொலைவிற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், பணி அமர்த்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. எனவே, பெண்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால்,மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அவர் இறுதி முடிவெடுப்பார். தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி